தமிழகத்தில் பெய்யப் போகும் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்சமயம் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, 31 5 2021 முதல் 1-6- 2021 வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் தமிழக மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் புதுவை, காரைக்கால், போன்ற பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2-6- 2021 முதல் 3-6- 2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் தமிழக மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், போன்ற இடங்களிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.