அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

Photo of author

By Pavithra

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி சூனியம் போன்றவற்றில் மிகவும் நம்பிக்கை உடையவர்கள்.இதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு பூஜை நடந்து கொண்டிருக்கும்.இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த 60 மற்றும் 30 வயதுடைய இரண்டு பெண்களும்,40 வயது மதிப்புடைய ஒரு ஆணும்,10 வயது சிறுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிய வருகிறது.இவர்களில் 4 பேரின் உடலும் வீட்டின் பின்புறம்
கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் இறந்து கிடந்த இடத்தினருகே பூஜை செய்ததற்கான தடயங்களும் அங்கு இருந்தன.அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பிடித்த மாதிரி பணக்காரராக பிறக்கலாம்,பிடித்த மாதிரியான வாழ்க்கை வாழலாம்,என்று மந்திரவாதி கூறியதை நம்பி அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி இறந்து கிடந்த 10 வயது சிறுமியின் உடலில் ரத்த காயங்கள் காணப்படுகின்றதனால் போலீசார் தரப்பினருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் வழக்கு பதிவு செய்து வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.