தவெகவுக்கு அட்வைஸ் செய்த மதிமுக நிர்வாகி.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!!

0
131
MDMK executive who advised TVK.. I have faith in you!!
MDMK executive who advised TVK.. I have faith in you!!

MDMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் பட்சத்தில், முதன்மை காரணமாக அறியப்படுவது விஜய்யின் அரசியல் வருகை. இவரின் அரசியல் பிரவேசம், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் யாருடன் கூட்டணி அமைப்போம் என்ற செய்தியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளார். இதனாலேயே இவரின் கூட்டணி குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் பிரச்சாரம் அனைத்திலும் கூடும் கூட்டத்தை கண்ட கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் அது வெறும் ரசிகர்களின் கூட்டம், தொண்டர்களின் கூட்டம் அல்ல என்று கூறி வந்தனர். இதனை கண்டு கொள்ளாத விஜய் அவரது தனித்த பாதையில் பயணித்து கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்க்கும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அவர்கள், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

விஜய் குறித்து பேசிய அவர், விஜய் மிகப்பெரிய திரை நட்சத்திரம். அவருக்கு பின்னால் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இளைஞர்கள் அவரது பின்னால் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியிலிருக்கும் மதிமுக திமுகவை அரசியல் எதிர் என்று கூறிய விஜய்க்கு ஆதரவு அதிகம் உள்ளது என்று பேசியிருப்பது திமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Previous articleஇபிஎஸ்யை சந்தித்த ஜி.கே.வாசன்.. முன் வைத்த கோரிக்கை இது தானா!!
Next articleகூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட ஆர்.பி. உதயகுமார்.. இறுதி முடிவை எட்ட போகும் தேமுதிக!!