ராகு கேது தோஷம் திருமண தோஷம் உள்ளிட்டவை நீங்க! இங்கே வாங்க!

Photo of author

By Sakthi

மாம்பழத்திற்கு பெயர் போன சேலம் மாவட்டத்தில் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் மிக கம்பீரமாக காட்சி தருகிறது.

அம்பாளை தரிசனம் செய்தால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம், உள்ளிட்டவை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வித்தை, புத்தி, சித்திக்கும், அஷ்டமாசித்திகளும் அம்பாளை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும் என்று சொல்லப்படுகிறது. அதோடு பாவ தோஷங்கள், ஏவல். பில்லி, சூனியம். எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் திருமணத்தடை குழந்தை இன்மை, ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அதோடு மனநோய் பாதித்தவர்கள் சுமார் 48 நாட்கள் இங்கு வந்து தீர்த்தம், விபூதி, போன்றவற்றை உட்கொண்டால் நோய் குணமாகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்துகொண்டால் அவைகள் நீங்கி விடுகின்றது. கால்நடைகளுக்கு உண்டாகும் நோய் நீங்குவதற்கு பக்தர்கள் விபூதி பெற்று செல்கிறார்கள். மக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் ஆலயத்திற்கு வருகை தந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் பூ வாக்கு கேட்பது மிகவும் பிரபலம் என்று சொல்லப்படுகிறது. பக்தர்கள் புதிய தொழில்கள் ஆரம்பிப்பதற்கும், திருமணம், நிலம் வாங்குதல், மற்றும் பல விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாக்கு கேட்டு அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அமாவாசையில் நடக்கும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரத்தில் பங்கேற்று கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.