மத்திய அரசின் ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பில் காலியாக இருக்கின்ற மெடிக்கல் கன்சல்டன்ட் பணிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான முழு விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வேலைக்கான விபரங்கள்
வேலையின் பெயர் – medical consultant (contract basis)
காலியிடங்கள்– 5
தேர்ந்தெடுக்கப்படும் பிரிவு – General-3 BC-1,SC-1
கல்வி தகுதி- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் இதில் வாய்ப்பு வழங்கப்படும்.
அனுபவம் – விண்ணப்பதாரர்கள் குறைந்தது இரண்டு வருடம் மருத்துவத் துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
சம்பளம்- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
சென்னையில் உள்ள ஐந்து இடங்கள்
ரிசர்வ் வங்கி அனெக்ஸ் கட்டிடம் 16, கிளாசிஸ் கோட்டை ராஜாஜி சாலை சென்னை 60001
இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு பெசன்ட் நகர். இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு கே கே நகர். இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குடியிருப்பு எஸ் எம். கேம்ஸ் கிராமம் கோயம்பேடு.
இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு சூளைமேடு பிரதான சாலை. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குடியிருப்பு அண்ணா நகர்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனைத்து சான்றிதழ்களின் நகருடன் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 21-11-2022 மாலை 5 மணி
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
Regional director human resources department reserve bank of India fort glacis,16 rajaji road chennai 600001
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கு opportunities. rbi.org.in மேலும் தகவலுக்கு www.rbi.in