ஆடி முளைக்கொட்டு விழா! திருவீதி உலா வந்த மதுரை மீனாட்சியம்மன்!

0
220

மதுரை மீனாட்சி அம்மன் திருக் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆடி முளைக்கொட்டு விழா, சிவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா, உள்ளிட்டவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழா என்று சொல்லப்படுகிறது. இந்த வருடத்திற்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழா வருகின்ற 22ஆம் தேதி வரையில் பத்து தினங்கள் நடைபெற இருக்கிறது.

திருவிழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கே திருவிழாவிற்கு காப்புகட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.விழா தினங்களில் மீனாட்சியம்மன் காலை இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.அந்த விதத்தில் இரண்டாம் நாளான 13-ஆம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு அவர் காட்சி கொடுத்தார். மூன்றாம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் ஏழாம் நாளான நேற்றைய தினம் பூ பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தந்தார். திருவிழாவின் எட்டாம் நாளான 19ஆம் தேதி தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பத்தாம் நாளான நேற்றைய தினம் கனக தண்டியல் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள் புரிந்திருக்கிறார்.

Previous article12 ம் வகுப்பு முடித்துள்ளீர்களா? மாதம் 50000 வரை வருமானம் பெறலாம்!
Next article10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here