தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?

Photo of author

By Pavithra

சமீபகாலமாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய பல காரியங்களை செய்துவருகின்றார்.குறிப்பாக சினிமா துறையில் நல்ல பிரபலம் அடைந்த நடிகர்களையே குறிவைத்து வம்புக்கு இழுத்து வருகின்றார். குறிப்பாக சொல்லப்போனால் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரின் குடும்பங்களையும் வம்புக்கு இழுத்து, அவர்களை இழிவாக பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மீரா மிதுன்.

இதனையடுத்து தற்போது ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகியுள்ளதை அவருடைய ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் மீராமிதுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ஒரு பதிவினை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து மிகச் சிறந்த நடிகராக மாறியுள்ள அவரை கண்டு நானும் வியக்கின்றேன்.ஆனால் அவரது “அரசியல் ஆசையும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற கனவு கனவாகவே அமையப் போகின்றது”.54 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும்,நம் மாநிலத்தின் பணியை சரியாக வகுத்திருக்கிறார்கள் எனவே “ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்”.
மீராமிதுனின் இந்த கருத்துக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.