29வது மெகா தடுப்பூசி முகாம்! 17.70 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது!

தமிழகத்தில் 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கியது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது மத்திய, மாநில, அரசுகள் தயாராகி வந்தனர்.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, சற்றே நோய் தொற்று பாதிப்பு குறைந்தது. இருந்தாலும் இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு நோய் தொற்று நோய் பரவல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகுதான் இந்த நோய் தொற்று பாதிப்பு முற்றிலுமாகக் குறையத் தொடங்கியது.

ஆனால் இந்த நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக தற்போது மீண்டும் இந்த நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது.

ஆகவே நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து, மெகா தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த விதத்தில் இந்தியாவில் இதுவரையில் எந்த மாநிலத்திலுமில்லாத அளவிற்கு நேற்று 100000 பகுதிகளில் 29வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நோய் தொற்று நோய் தடுப்பூசி முகாம் முதல் தவணை மற்றும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நினைவூட்டல் சீட்டு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

இந்த சீட்டில் தடுப்பூசி போட தகுதியானவர்கள் அருகிலுள்ள முகாம்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தது. இதன் மூலமாக பெருமளவில் தகுதியானவர்கள் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தை சார்ந்தவர்கள் மக்களை தேடி மருத்துவம் குழுவினர் மற்றும் தெற்கு ரயில்வே சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு பயனாளிகளை தேடி சென்று தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தலைநகர் சென்னையில் மட்டும் 3,300 முகங்கள் நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. அந்த விதத்தில் 1600 குழுக்கள் அமைக்கப்பட்டு வார்டுக்கு 1 முகாம் என 200 நிலையான முகாம்களும் மீதமுள்ள 1,400 குழுக்கள் 3100 இடங்களில் பொதுமக்களின் தேவையினடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தினர்.

அந்த விதத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 17,70,041 பேருக்கு நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 60,042 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 23,574 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 9,16,449 பேருக்கும் 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 4,49,978 பேருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 2,94,264 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் தமிழ்நாட்டில் 10,0,74,06,867 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகங்களில் மட்டும் 4.12 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கம் சிவன் பூங்காவில் நடைபெற்ற நோய் தொற்று நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை துறை மூலமாக வீடுகளிலிருந்து ப்பட்ட காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை வளத்தை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப்சிங் பேடி, உள்ளிட்டோரும் பங்கேற்றதாக தெரிகிறது.

Leave a Comment