சென்னையில் நாளை 32 வது சிறப்பு தடுப்பூசி முகாம்! மாநகராட்சி சார்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

0
235

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது சென்னையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை 32வது மெகா தற்போது சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக 200 வார்டுகள் 2000 முகாம்கள் அமைக்க திட்டமிட்டு வார்டு 1க்கு நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள் என ஒட்டுமொத்தமாக 1000 சுகாதாரக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த பணிகளில் மாநகராட்சி காவல்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பதாக தெரிகிறது.

ஆகவே முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் என்று எல்லோரும் நாளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் இருக்கின்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் பங்கேற்றுக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கின்ற மற்றொரு செய்தி குறிப்பில் சென்னை கடந்த 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் முக கவசம் அணியாத 2,405 நபர்களிடமிருந்து 12,2,500 வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous article டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!
Next articleசேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here