தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது 17வது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 76 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறிய பட்டிருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் 10 பெண்கள் உட்பட 34 மாணவர்கள் நோய்த்தொற்று பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதோடு 76 புதிய வகை நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்டிருக்கிறது. இது சமூக பரவலுக்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது. புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள் என்பது எங்களுக்கு கிடைத்திருக்கின்ற திருப்தி வழங்கும் செய்தி. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக புதிய வகையிலும் இவற்றால் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்திருக்கிறது. அதில் 66 பேர் குணமடைந்து திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்று டெல்டா மற்றும் புதிய வகை நோய்த்தொற்று பரவல்கள் வேகமாக பரவி வருகிறது இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே தீர்வு. தமிழக ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 85% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் 58 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், நாளைய தினம் 17ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போட தகுதி உள்ளவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திங்கள்கிழமை முதல் பதினைந்து முதல் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசிகளை பெற தகுதியானவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தடுப்பு ஊசி செலுத்தப்படும் இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.