நேர்மையான தலைமை காவலர் செய்த செயலால் நெகிழ்ந்து போன டிஜிபி!

Photo of author

By Sakthi

சென்னை தாம்பரம் அருகே இருக்கின்ற இரும்புலியூர் பகுதியை சேர்ந்த சுமதி, மற்றும் அவருடைய கணவர், மற்றும் அக்கா ,விஜயலட்சுமி உடன் கடந்த 3ஆம் தேதி மதியம் பட்டாபிராம் சென்றுவிட்டு ஆவடிக்கு ஆட்டோவில் பயணித்த சமயத்தில் ஆட்டோவில் வைத்திருந்த இரண்டு சவரன் தங்க நகை, மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் நில பத்திரம் போன்ற ஆவணங்கள் அடங்கிய பை காணாமல் போனது . இதுதொடர்பாக புகார் தெரிவிக்க ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பட்டாபிராம் காவல் நிலைய தலைமை காவலர் எஸ். செல்வகுமார் கடந்த மூன்றாம் தேதி பட்டாபிராம் இந்து கல்லூரி அருகே போய்க் கொண்டிருந்த சமயத்தில், அந்தப் பகுதியில் சாலையில் கிடந்த பையை பரிசோதித்து பார்த்த சமயத்தில், அந்தப் பையில் தங்க நகைகள் ,பணம் மற்றும் நிலம் தொடர்பான பத்திர ஆவணங்கள், போன்றவை இருந்தது. அதனை கவனித்த செல்வகுமார் அந்த பத்திர ஆவணத்தில் இருந்த சுமதியின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பையை சுமதியிடம் ஒப்படைத்தார்.

பட்டாபிராம் தலைமை காவலர் எஸ் .செல்வகுமார் அவர்களின் நேர்மை மிக்க இந்த செயலை பாராட்டும் விதமாக சென்னை காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் செல்வகுமார் அவர்களை நேரில் அழைத்து பாராட்டியதுடன் சன்மானமும் வழங்கியிருக்கிறார்.