ஃபேஸ்புக் மெசஞ்சரில் விரைவில் கம்யூனிட்டி அறிமுகம்
மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மெசஞ்சரில் கம்யூனிட்டி அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, வாட்ஸ்அப் செயலியில் கம்யூனிட்டி என்ற புதிய அம்சம் அறிமுகமானது. இந்த அம்சம் தற்போது பேஸ்புக் மெசஞ்சர் தளத்தில் அறிமுகம் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஃபேஸ்புக் மெசஞ்சர் தளத்தில் 5000 பேர் வரை கம்யூனிட்டியில் இணையலாம். கம்யூனிட்டியில் இணைவது மட்டுமின்றி, தரவுகள் பரிமாற்றத்திலும் ஈடுபடலாம். மேலும், ஒத்த ரசனை கொண்டவர்களுடன் நட்பு கொள்ளலாம். கிட்டத்தட்ட வாட்ஸ்அப் கம்யூனிட்டி செயல்படுவது போலவே ஃபேஸ்புக் மெசஞ்சர் கம்யூனிட்டி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் ஒருவரது கைபேசி எண் இருந்தால் மட்டுமே கம்யூனிட்டியில் இணைய முடியும். ஆனால், மெசஞ்சர் கம்யூனிட்டியில் தங்கள் நண்பர்களை கம்யூனிட்டியில் உள்ளவர்கள் எளிமையாக இணைத்துக் கொள்ளலாம். விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எவ்வாறு செயல்படும் என்பது குறித்து மெட்டா நிறுவனம் கூறி உள்ளது. அதன்படி பகிரப்பட்ட ஆர்வங்கள் உள்ளவர்களுடன் இணைவதற்கு மெசேஞ்சரில் ஒரு தனிப்பட்ட சமூகத்தை உருவாக்கலாம். இது சமூக நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும். மேலும் மெசேஞ்சரில் உள்ள எவரும் இதனை கண்டறியலாம் மற்றும் சேர்ந்து கொள்ளலாம். அவை ஃபேஸ்புக் குழுக்கள் போல் இருக்காது.
மேலும் ஃபேஸ்புக் குழுக்களில் உள்ள அதே அம்சங்களாக இருக்காது. மெசேஞ்சரில் உள்ள சமூகங்கள் அதிக பொது உரையாடல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது உங்கள் தனிப்பட்ட செய்திகளை போன்ற தனி உரிமை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை. மேலும் இவை பேஸ்புக் குழுக்களுடன் தொடர்புடைய சமூக அரட்டைகள் போன்ற தனியுரிமை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.