மனதில் ஏதோ ஆபத்து ஏற்பட போவதாக தோன்றுகிறதா? உடனே இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள் எந்த ஆபத்தும் நேராது!!

Photo of author

By Pavithra

சிலருக்கு தன் குடும்பத்திலோ அல்லது தன்னைச் சுற்றியுள்ள உறவினர் நண்பர்களுக்கோ ஏதோ ஆபத்து ஏற்பட போகிறது என்று கனவின் மூலமாகவும் அல்லது சிலருக்கு மனதில் இதுபோன்ற எண்ணங்கள் உணர்வர்.இதே விஷயம் திருப்பி திருப்பி மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் இந்த சமயத்தில் அந்நபர்கள் தன் நெருங்கியவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனவேதனையுடன் இருப்பர்.

பிராத்தனைகளிலே மிகச் சிறந்தது ஒருவர் மற்றவருக்காக பிரார்த்தனை செய்வது என்று ஆன்மீகரீதியாக நம்பப்படுகிறது. இதுபோன்று எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் சமயத்தில் உடனே இந்த தெய்வத்திற்கு இந்த முறையில் விளக்கேற்றுங்கள் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எந்த தீமைகளும் அண்டாது.

Kala Bairavar-News4 Tamil Online Tamil News3
Kala Bairavar-News4 Tamil Online Tamil News3

பைரவருக்கு எவ்வளவு பெரிய துன்பத்தையும் எளிதியில் நீக்கி மகிழ்ச்சியை தரக்கூடிய சக்தி உண்டு.பைரவரை வழிபட்டு வருகையில் விபத்து ,துர்மரணம் போன்றவற்றை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்பது ஆன்மீக ரீதியாக முற்றிலும் நம்பப்படுகிறது.தன்னைச் சுற்றி உள்ள யாரோ ஒருவருக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று நினைக்கும் நேரத்தில் காலபைரவரை நாம் வழிபட்டு வந்தால் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது.பைரவருக்கு மிகவும் உகந்தது செவ்வரளியும் வெள்ளை பூசணி ஆகும்.

Kala Bairavar-News4 Tamil Online Tamil News2
Kala Bairavar-News4 Tamil Online Tamil News2

அவருக்கு உகந்த இந்த செவ்வரளி மாலையை சூட்டி வெள்ளை பூசணியில் தீபமேற்றி நாம் மனதார வழிப்படுகையில் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள நம் சுற்றார் களுக்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் பைரவர் நம்மை கரத்தாருளுவார்.