இறைவனிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்யலாமா? எது வழிபாடு? எவ்வாறு பிரார்த்திப்பது?

Photo of author

By Pavithra

சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள், கூட்ட நெரிசலில் வரிசையில் நின்று காத்திருந்து பின்பு கருவறையில் மூலவரை காணச் செல்கின்றனர். ஆனால்மூலவரை கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது முறையான வழிபாடா?

நம்மைப் படைத்த இறைவனுக்கு நமக்கு எதைக் கொடுக்க வேண்டும் எதைக் கொடுக்கக் கூடாது என்பது தெரியும்.எனவே மூலவரே கண்டவுடன் கண்களை மூடிக் கொள்ளாது தெய்வத்தின் அழகை கண்டு ரசியுங்கள்.இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.ஏனெனில் கோயில் மூலவரை காண்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல சில சமயங்களில் நாம் செல்லும் நேரத்தில் இறைவனை அலங்காரம் செய்வதற்காகத் திரை போட்டு மறைத்து விடலாம் அல்லது கூட்ட நெரிசல் காரணமாக மூலவர் சரியாக காண முடியாத நிலை கூட ஏற்படலாம்.

எனவே தான் எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.

உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள். இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்.என்னுடைய அனைத்து கஷ்ட நஷ்டங்களும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என்று நம்புகிறேன் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் வீட்டில் தினசரி பூஜை செய்யும் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள் இது தான் உண்மையான வழிபாடு ஆகும்.