தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்!!

0
154

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்…

 

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்தியாவில் முதல் முறையாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பொம்மச்சந்திரா ஆகிய பகுதிகளுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்க டென்டர் விடப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசுர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இடையே நாள்தோறும் அதிக பயணிகள் வேலை காரணமாக பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக ஓசூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. போக்குவரத்து நெரிசல் காரணமாக தினமும் வாகனங்கள் சாலையில் வரிசை கட்டி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

 

இந்த நிலைமையை மாற்றுவதற்கு பெங்களூரு-ஓசூர் பகுதிகளை இணைக்க மெட்ரோ இரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி முதல் கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திரா பகுதி வரை மெட்ரோ இரயில் சேவை தொடங்குவதற்கு டென்டர் விடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ இரயில் சேவை மொத்தம் 20.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த தூரத்தில் தமிழகத்தில் 8.8 கிலோ மீட்டர் தூரமும், கர்நாடக மாநிலத்தில் 11.7 கிலோ மீட்டர் தூரமும் அடங்கும்.

 

இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்படுவதை அடுத்து ஓசூர் மற்றும் பொம்மச்சந்திரா பகுதிகளுக்கு இடையே ஆய்வு நடத்தப்படுகின்றது. மேலும் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே முதல் முறையாக மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Previous articleகொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!
Next articleவிஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி!! இனி இந்த மாவட்டங்களிலும் பாடசாலை!!