மதுரை இரண்டாவது தலைநகராக்குவதற்கு எம்.ஜி.ஆர் விருப்பப்பட்டார் என்று கமல்ஹாசன் தெரிவித்து குறித்து ஹண்டே கருத்து தெரிவித்திருக்கின்றார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றவேண்டும் என எம்.ஜி.ஆர் கனவு கண்டதாக தெரிவித்தார். எம் ஜி ஆர் கனவின் நீழ்ச்சி தான் இன்று குறிப்பிட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் ஆட்சியில் மதுரை இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் இதற்கு முன்னரே மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்ற வலியுறுத்தல் மதுரை மாவட்ட அதிமுகவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர் திருச்சியை தான் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகளையும் மேற்கொண்டார் ,என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனாலும்கூட எம்.ஜி.ஆர் மதுரையை இரண்டாவது தலைநகராக விரும்பினார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது பல விவாதங்களை ஏற்படுத்தியது அதையே இப்போதும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையிலே, எம்ஜிஆர் உண்மையாகவே மதுரையை தலைநகராக விரும்பினாரா? என்ற தகவலை அவருடைய அமைச்சரவையில் 10 ஆண்டுகாலம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹெச்பி ஹண்டே அவர்கள் தெரிவித்திருக்கின்றார். மதுரையை இரண்டாவது தலைநகராக கட்டமைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் திட்டமிட்டிருந்தார் என்று கமல்ஹாசன் தெரிவித்திருப்பது முற்றிலும் தவறான ஒன்று, என அறவே மறுத்திருக்கிறார் ஹண்டே.
எம்.ஜி.ஆர் தன்னுடைய முதல் ஆட்சிக்காலத்தில் திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றலாம் என்று நினைத்து இருந்தார் ஏனென்றால், அது தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்த காரணத்தால், அது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்காக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தை நியமனம் செய்தார் என்று தெரிவித்தார் ஹெச்பி ஹண்டே.
அதோடு சோமசுந்தரம் திருச்சி சென்று திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையிலான காட்டூரை உள்ளடக்கிய ஒரு பகுதியை அடையாளம் கண்டார் ஆனாலும் இரண்டாவது தலைநகர் கட்டுமானத்திற்கு அதிகமாக செலவாகும் அது மக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும் என்ற காரணத்தால், தன்னுடைய விருப்பத்தை எம்.ஜி.ஆர் கைவிட்டார். எம்.ஜி.ஆர் மதுரை மிகவும் விரும்பினாலும் கூட அதனை இரண்டாவது தலைநகராக ஒருபோதும் நினைத்தது கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார் எச்.வி. ஹண்டே.