இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!!

Photo of author

By Sakthi

இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!!

அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கும் ஆலையை தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செமிகண்டக்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் கம்பியூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கு தேவையான மெமரி சேமிப்பு பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா அதன் தேவைக்கான செமிகண்டட்கர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில் மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கவுள்ளது.

இதனால் செமிகண்டக்டர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் தங்களுக்கு தேவையான செமிகண்டக்டர்களை உள்நாட்டிலேயே பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக இந்தியாவில் மைக்ரான் டெக் நிறுவனம் 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் 8400 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.

தற்போது இந்நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகின்றது. புவிசார் அரசியல் காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் மைக்ரான் டெக் நிறுவனம் செமிகண்டக்டர்களை தயாரிக்க இந்தியாவை களமாக தேர்ந்தெடுத்துள்ளது.இதனால் இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்களின் செமிகண்டக்டர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மைக்ரான் டெக் நிறுவனம்.அந்த தேவையை பூர்த்தி செய்யவுள்ளது.