தமிழ்நாட்டில் நாள்தோறும் சுமார் 2 1/4 கொடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெற்ற வருகிறது. இதில் அரசு நிறுவனமான ஆவின் மூலமாக 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடைபெறுகிறது. மீதமிருக்கின்ற பாலை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சார்ந்த தனியார் நிறுவனங்கள் தான் கொள்முதல் செய்து வருகின்றன.
தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை அதிகரிப்பது வழக்கம் தான். கடந்த 2020 ஆம் வருடம் நோய் தொற்று ஊரடங்குக்கு முன்னர் தனியார் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. தினசரி பால் உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகிப்பதன் காரணமாகவும், டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் தனியார் பாளையே உபயோகப்படுத்தி வருவதாலும், தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை அதிகரிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக பால் முகவர்கள் தொழிலாளர், நலச்சங்கத்தினர், பொதுமக்கள், உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.
இந்த வருடம் ஆரம்பத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும், தனியார் பால் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில், 3வது முறையாக தனியார் பால் விலை அதிகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தனியார் பால் விற்பனை இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், சீனிவாசா பால் நிறுவனம் பால் வலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் வேலையை ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தவிருக்கிறது.
தனியார் பால் விலையுயர்வு காரணமாக, பால் சார்ந்த மற்ற பொருட்களும் விலை உயர்வை சந்திக்கும் அபாயம் உண்டாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்த திடீர் விலையுயர்வு ஏழை, எளிய, மக்களை கடுமையாக பாதிக்கக்கூடும், அதோடு தனியார் பால் விலையுயர்வு காரணமாக, பால் சார்ந்த தேநீர், காபி, போன்ற மற்ற பொருட்களின் விலையும், அதிகரிக்கும் அபாயம் உண்டாகியிருக்கிறது. ஆகவே காபி, தேநீர், உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடும் நபர்கள் கவலையடைந்திருக்கிறார்கள்.