தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்!
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆவினில் பச்சை நிற பால் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக முகவர் சங்கம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் மறுப்பு.
சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட பொருட்களை அமைச்சர்கள் சேகர்பாபு ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஆவடி நாசர்:
கடந்த ஆட்சி காலத்தைக் காட்டிலும் தற்போது பால் விற்பனை அதிகரித்துள்ளது , கடந்த ஆட்சிக் காலத்தில் 26 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை , தற்போது 28 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.
ஆரஞ்சு நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு இன்னும் 46 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி வருகிறது ,வாணிபம் செய்யும் நபர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டு உள்ளது அந்த விலையும்
மற்ற தனியார் கம்பெனிகளை காட்டிலும் 10 ரூபாய் குறைவாகவே ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் குறைந்து இருப்பதாக வெளியாகும் கருத்து தவறானது .
பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் செய்யப்படும் ,ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
தவறான முறையில் SNF கார்டுகள் பயன்படுத்திய 40ஆயிரம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது ,விரைவில் அனைத்து கார்டுகளையும் ரேஷன் அட்டைகளுடன் இணைக்கும் பணி துவங்கும்,ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அரசு மானியம் தருகின்ற நிலையில் அதில் நடக்கும் தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமுல்,நந்தினி போன்ற பால் விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்.