விஷம் கலந்ததால் கண்மாயில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்:? தேனி அருகே நடந்த விபரீதம்!

Photo of author

By Pavithra

விஷம் கலந்ததால் கண்மாயில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்:? தேனி அருகே நடந்த விபரீதம்!

 

தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.இந்த கண்மாய்களை மீன்வள சங்கங்கள் சார்பாக மீனவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள கண்மாய் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு மீனவர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு 10 லட்சம் மதிப்பிலான மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு, மர்ம நபர்கள் கண்மாய் தண்ணீரில் விஷம் கலந்துவிட்டு சென்றதாக செய்திகள் கூறப்படுகின்றன. தண்ணீரில் விஷம் கலந்ததால் அனைத்தும் மீன்களும் செத்து கண்மாயில் மிதந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் கண்மாய்க்கு சென்று பார்த்த பொழுது அனைத்து மீன்களும் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன், அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்வளத் துறையினர் கண்மாயில் உள்ள தண்ணீரை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியும், தற்போது நடந்து வருகின்றது.இந்நிலையில் விஷம் கலந்தவர்களை விரைவில் கண்டுபிடித்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மீனவர்களும் அப்பகுதி மக்களும் மீன்வளத் துறை அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.