உ.பி-யில் மினி லாக்டோன் திட்டம்?அரசு அதிரடி

Photo of author

By Pavithra

உத்தர பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 35,092 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 913 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை 22,689 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.மேலும் 11,490 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 

தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை மினி ஊரடங்கு சட்டத்தை அமல் படுத்தி உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு தொற்று பரவாமல் தடுக்க “மினி லாக்டோன் “திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று கூறினார். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளல்லாத அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் உணவு விடுதிகள் ஆகிய அனைத்தும் மூடப்படும்.அத்தியாவசிய பணிகளான கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் சுத்தம் செய்யும் வேலைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்

மினி லக்டோன் திட்டத்தை அம்மாநில அரசு தற்போது அமல்படுத்தி நாளை (திங்கட்கிழமை) காலை 5மணி முதல் முடிவடைகிறது.

தற்போது வரை கொரோனா தொற்றால் உத்திரப்பிரதேசம் 6வது மாநிலமாக இருந்துவரும் நிலையில் படிப்படியக குறைக்க அம்மாநில முதல்வர் எடுக்கும் ஒரு முயற்சியாக கூறப்படுகிறது.