வாரிசு அரசியலை தூக்கி பிடிக்கும்  திமுக!! பரபரப்பை கிளப்பிய அன்பில் மகேஷ்!!

Photo of author

By Sakthi

DMK: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் இல்லாததை போல வாரிசு அரசியலை செய்து வருகிறது திமுக. அதாவது அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்,அத்தை அமைச்சர், மருமகன் மத்திய அமைச்சர் என குடும்பத்தில் இருப்பவர்களால் கட்சி நடத்தப்பட்டு வருவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

பெரியார் தோற்றுவித்த கட்சியை இன்று கலைஞர் குடும்பத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசியல் நிறுவனமாக மாற்றி இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. திமுகவில் முதலமைச்சர் பதவி கலைஞருக்கு பின் அவர் மகன் ஸ்டாலின், அவருக்கு பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு பின் இன்ப நிதி என குடும்ப அரசியல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

மேலும் திமுக மீது குடும்ப வாரிசு அரசியல் நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது, அதை உறுதிப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் “தலைவனே நாளைய தலைவனே”  என்ற பாடல் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின் உதயநிதி ஸ்டாலினுக்கு  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசுகையில் இன்றைய “Deputy CM ஒரு நாள் Definitely CM” என புகழ்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. திமுக கட்சியில் முதல்வர் மகன் என்ற காரணத்தால் துணை முதல்வர் பதவியில் இருக்கிறார் உதயநிதி என அரசியல் தலைவர்கள் குற்றம்சாற்றியுள்ளார்.

மேலும் திமுக கட்சியில் அக் கட்சிக்காக அயராது பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் இருக்கையில் துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கிடைத்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.