இடித்தால் கையை வெட்டி விடுவோம்! அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசம்!

0
148

ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ராசாவின் கைகள் வெட்டப்படும் என்று கடம்பூர் ராஜு அறிவித்தது சர்ச்சையாக மாறி இருக்கின்றது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இது குறித்து முதலமைச்சருடன் நேரடி விவாதத்திற்கு தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா ஜெயலலிதாவை சட்டத்திற்குப் புறம்பாக சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து அதிமுக மற்றும் திமுக என்று இரு கட்சியினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் வெடித்து வருகின்றது ஸ்டாலின் ஆ.ராசா இருவரையும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார் அந்த வகையில் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் ராசாவிற்கு எதிராக சில தடித்த வார்த்தைகளோடு விமர்சனம் செய்து இருக்கின்றார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ராசாவிற்கு ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது காற்றில் கூட ஊழல் செய்ய இயலும் என்பதை 2ஜி அலைக்கற்றை மூலமாக இந்த உலகத்துக்கு நிரூபித்த நவீன விஞ்ஞானி தான் ராசா அவரும் கனிமொழியும் மக்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்காகவா திகார் சிறைக்கு போனார்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்தபோது இருவரும் சிறைக்கு சென்று இருந்தார்கள் அதுதான் திமுக தலைவராக இருந்த கருணாநிதி கூட நட்பு கேடாய் முடியும் என்று தெரிவித்தார் என கூறியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில் இருக்கின்ற ராசாவிற்கு ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என்ற அமைச்சர் கடம்பூர் ராஜு ராசாவிற்கு நாவடக்கம் வேண்டும் அண்ணா நினைவிடத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என எழுதப்பட்டு இருக்கின்றது அதேபோல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஒரு வாசகத்தை நிச்சயமாக எழுதுவோம் ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்று செல்கின்றார் ராசா இடித்தால் அவருடைய கை வெட்டப்படும் நாங்கள் துணிச்சலாக சொல்கின்றோம் நாங்கள் அல்ல ஒன்றரை கோடி தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

அதோடு ஜெயலலிதாவை அவதூறாக பேசினால் ஒரு ராஜா என்ன ஓராயிரம் ராஜா வந்தாலும் கூட இருக்கிற இடம் தெரியாமல் ஆகிவிடுவார்கள் அதுபோல அவ்வாறு ஒரு கருத்தை கருணாநிதியைப் பற்றி அவருடைய நினைவிடத்தில் நாங்கள் எழுத ஆரம்பித்தால் அந்த கல்லறையை பத்தாது மெரினா கடற்கரையில் போதாது எனவும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார் கடம்பூர் ராஜு.

Previous articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும்! இன்றைய ராசி பலன் 10-12-2020 Today Rasi Palan 10-12-2020
Next articleதமிழகத்தின் முக்கிய பிரபலத்தை சந்தித்த கமலஹாசன்! அரசியலில் திடீர் திருப்பம்!