அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கட்டணம்; அமைச்சர் மா சுப்ரமணியன் அளித்த விளக்கம்!!

0
112

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான காரண விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ள நிலையில் மக்கள் அனைவரும் மருத்துவ சேவைகளை பெற வேண்டும். என்பதே அரசின் நோக்கமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருந்துகள் சிகிச்சை ஆகியவை அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும், ஆனால் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்பினால் அவர்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது வார்டுகளை தவிர தனிப்பட்ட வசதிகளை விரும்புபவர்கான ஏற்பாடாக பார்க்கப்படுகின்றது. அரசு மருத்துவமனை என்றாலே இலவசமாக சிகிச்சை பெரும் மருத்துவமனை என இருக்கும் சூழலை தற்போது மாற்றி அரசு மருத்துவமனையிலும் கட்டண பிரிவு என்ற செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டண பிரிவில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. மேலும் ஒரு சிலர் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர். பொது பிரிவுகளில் அனைவருக்கும் சமமான சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் தனி அறையில் சிகிச்சை பெற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.

அதனால் விரும்புவர்கள் மட்டும் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவிவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய உழவன் செயலி; அரசு சொன்ன குட் நியூஸ்!!
Next articleமுதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ.. மக்களுக்கு வெளியாகும் புதிய அறிவிப்பு!!