சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, உள்ளிட்டோருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழகம் முழுவதும் இருக்கின்ற அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
2000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அம்மாவின் கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன அதில் பணிபுரிந்தவர்கள் நோய் தொற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம், இரண்டு முறை நோய்தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் இந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.