கலாய்த்த அமைச்சர்…! கடுப்பான எதிர்க்கட்சியினர்…!

Photo of author

By Sakthi

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய குழு மாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை ஆரம்பித்து வைத்தார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அதிமுக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து கொண்டே வருவது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் தான் இந்த நீட்தேர்வு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது இப்போது என்னவென்றால் நீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கின்றார் ஸ்டாலின் நீட் விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் பெற்ற பின்புதான் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் என எங்கள் கட்சி உறுதியாக இருக்கின்றது ஆனால் இதுவே திமுக ஆட்சியில் இருந்திருந்தால் கைகட்டி வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்.

நாங்கள் செய்வதை தான் சொல்லும் சொல்வது தான் செய்வோம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் நகை கடன் தள்ளுபடி செய்வோம் என்று ஒரு பொய்யான வாக்குறுதியை மக்களுக்கு அளித்தார் இப்போது பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வருகின்றார் அவர் ஆட்சிக்கும் வர மாட்டார் பொதுமக்களுக்கு பயணுள்ளதை செய்யவும் மாட்டார் என்று தெரிவித்தார்.

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுகிறேன் என்று சொல்வதை போல் ஏமாற்றுவார் ஸ்டாலின் பொதுமக்கள் யாரும் அவரை நம்பி விடாதீர்கள் நம்பவும் மாட்டார்கள் என்று அழுத்தமாக தெரிவித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு