சென்னை திரு வி க நகர் மண்டலத்தில் பருவ காலம் மருத்துவ முகாமை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அப்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கி விடப்பட்டதால் 96 சதவீத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றன தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பெருமழை பொழிந்த போதும் சென்னைக்கு பாதிப்பு உண்டாகவில்லை என்று பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவதுடன் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னையில் இன்று பெருநகர மாநகராட்சியுடன் சுகாதார துறையும் ஒன்றிணைந்து 200க்கும் மேற்பட்ட வார்டுகளில் மழைக்கால மருத்துவ முகாமை நடத்துகிறது என்று தெரிவித்துள்ளார் சேகர் பாபு.
சென்னையில் 156 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளனர் மீதமுள்ள 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிந்தால் அடுத்த வருடம் பருவமடைக்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது பள்ளங்கள் இருக்கின்ற பகுதிகளில் சாலைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பருவ மழை முடிவடைந்த உடன் சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஆர் எஸ் எஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, மக்களை பற்றி அக்கறையின்றி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மூலமாக கலவரம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதலமைச்சர் அனைத்து விதமான முடிவுகளையும் மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.