உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

Photo of author

By Sakthi

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

Sakthi

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் இருக்கின்றார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை 50 வருடங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கின்றார் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 டிஎம்சி குடிநீர் கொண்டு வரப்பட இருக்கின்றது 17 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நல்லதொரு முடிவை எடுப்பார் அவர் கட்சி தொடங்கினால் அவருடைய கொள்கையை அறிந்த பின்புதான் கருத்து கூற இயலும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என்று அனைவரும் பாராட்டுகிறார்கள் அதன் காரணமாகத்தான் ஸ்டாலின் விரக்தியில் இருக்கின்றார் 2021 ஆம் ஆண்டிலும் பழனிச்சாமி தான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் அதிமுக அரசில் மக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்கின்றார்கள் மறுபடியும் அதிமுக ஆட்சிதான் கனிமொழி மற்றும் உதயநிதியை காண்பதற்காக கூட்டம் அதிகம் கூடுகிறது என தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதியே கூறியிருக்கின்றார் கூட்டம் கூடுவதை வைத்து எந்த ஒரு முடிவையும் எடுத்துவிட முடியாது கூட்டம் எல்லாம் வாக்காக மாறிவிடாது இன்று தெரிவித்தார் அமைச்சர்.

முந்தானை முடிச்சு திரைப்படம் வெளியான சமயம் நடிகர் தவக்களை அவர்களின் நடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது பல ஊர்களுக்கு அவரை அழைத்துச் சென்று அந்த படத்தை பிரபல படுத்தினார்கள் அவர் மதுரை வந்த போதும் மக்களின் கூட்டம் அலைமோதியது ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவருக்கு வாக்களித்து இருப்பார்களா வாக்களிக்க மாட்டார்கள்? தவக்கலையை வேடிக்கை பார்ப்பதற்காக வந்ததுபோல இன்று உதயநிதியை பார்ப்பதற்காக மக்கள் வருகின்றார்கள் என்று விமர்சனம் செய்தால் அமைச்சர். சசிகலா விடுதலையான பின்பு அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க இயலாது என்று தெரிவித்து விட்டார் செல்லூர் ராஜு.