தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் எச்சரிக்கை?

0
124

கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.பிறகு தொற்றின் தீவிரத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் மேல் நிலைக்கல்வி தொடருவதற்கு மதிப்பெண்களை அடிப்படையாக அமைவதால் காலாண்டு அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டின் சதவீதத்தையும் அடிப்படையாக கொண்டு மதிபெண்கள் வழங்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கல்வி நிறுவனங்கள் காலாண்டு அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்களில் குளறுபடி செய்வதாக புகார்கள் எழுந்தன.இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் அவ்வாறு குளறுபடிகள் நடப்பின் தனியார் கல்வி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Previous articleநாங்க SOFT இல்ல! சீனாவுக்கு பாஜக மூத்த தலைவர் எச்சரிக்கை!
Next articleஇந்த தப்ப செய்யாதீங்க! கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!