பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு?

Photo of author

By Pavithra

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பின்பு கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு காலாண்டு அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேட்டில் மதிப்பெண் அடிப்படையில் பொது தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும்,இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக சென்னையில் தலைமைச் செயலகத்தில் நேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவாறு
மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் மடிக்கணினியில் அனைத்துவிதமான பாடப்பிரிவுகளையும் பதிவிறக்கம் செய்து படிப்பதற்கு ஏதுவாக வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கொள்கையை பற்றி தமிழ்நாடு அரசு ஒரு நல்ல முடிவை விரைவில் எடுக்கும்,மேலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வியை கற்பதற்கு சில நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன,மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வரும் எல்லா திட்டங்களும் செயல்படுத்த முதல்வர் உறுதுணையாக இருந்து கல்வித் துறைக்கு தேவையான ஆலோசனை வழங்கி வருகின்றார் என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.