குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது!! பாஜக-வை  சீண்டிய அமைச்சர் சேகர்பாபு!!

Photo of author

By Sakthi

PJB-DMK:பாஜகவை சீண்டும் விதமாக கிண்டல் செய்து பேசி இருக்கிறார்  அமைச்சர் சேகர்பாபு.

சென்னை போரூரில் உள்ள பசுமை பூங்காவில் ஆய்வின் பொது அதிகாரிகளிடம் பாஜகவை சீண்டும் விதமாக குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்று  அமைச்சர் பேசி இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சேகர் பாபு அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் இவர் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவராகவும் இருந்து வருகிறார்.

எனவே சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும செயல் பாடுகள் இவரின் கண்காணிப்பின் கீழ் வருகிறது. இந்த நிலையில்  சென்னை போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநில பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த  பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, அமைக்கப்பட உள்ளது .

மேலும் ,இளைஞர் களுக்கு என திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்  ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அந்த பணிகளை பார்வையிட அதிகாரிகளுடன் சென்று இருக்கிறார். மேலும் அங்கு உள்ள குளத்தை பார்த்து குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது என கிண்டல் செய்துள்ளார்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் பாஜக மற்றும் திமுக இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்து வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.