Minister Shekhar Babu: அமைச்சர் சேகர்பாபு தவெக விஜய்-யை களத்துக்கே வராத தற்குறி என விமர்சித்து இருக்கிறார்.
ஆனந்த விகடன் குழுமத்துடன் சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று (06.12.2024) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பங்குபெறுவதால் விசிக திருமாவளவன் இந்த விழாவுக்கு வரவில்லை.
இந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசும் போது 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, பிறப்பால் ஒரு முதலமைச்சர் இனி உருவாகக் கூடாது. ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சர் ஆக வேண்டும் குரல் கொடுத்தவர் விஜய்.
மேலும் இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் இல்லை, ஆனால் அவரது மனசாட்சி இங்கு தான் இருக்கிறது என்று கூறினார். அடுத்ததாக பேசிய விஜய் , திருமாவளவன் புத்த வெளியீட்டு விழாவுக்கு வராததற்கு காரணம் திமுக கொடுத்த அழுத்தம் தான் என்றார். மேலும் 200 சீட்டுகள் என்ற திமுகவின் கூட்டணி கணக்குகளை உடைத்தெறிவோம் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் திமுக 240 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அதற்கு திமுக தொண்டர்கள் உழைப்பார்கள். களத்துக்கே வராத தற்குறிகள் திமுக பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் விஜய்யை விமர்சித்து இருந்தார்.