அரசு பள்ளிகளில் 75% தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு! அமைச்சர் பேட்டி!

Photo of author

By Sakthi

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் 2000 என்ற எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று வெறும் 9 என்ற அளவிலேயே அதிகரித்திருக்கிறது. இதுவரையில் வந்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் நேற்று இருக்கின்ற நிலைமையை விடவும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட பொங்கல் விடுமுறையை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஆகவே பொங்கல் பண்டிகைக்குப் பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாள்தோறும் 1.5 லட்சத்திற்கும் குறைவான அளவில் பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறார், அதனடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அதிகமான அளவில் பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

நோய்தொற்று ஏற்படும் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் கூட அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது என்பது குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதித்தவரின் வசதிக்காக அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு மையம் போன்ற  1,96000 படுக்கைகள் இருக்கின்றன. ஆனாலும் தற்சமயம் அதில் 9000 படுக்கைகளை நிரம்பியிருக்கின்றன. ஆகவே படுக்கைகள் தொடர்பாகவும், ஆக்சிஜன் வசதி தொடர்பாகவும், மருந்து, மாத்திரைகள், தொடர்பாக கவலைப்பட தேவையில்லை தேவையான அளவில் கையிருப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

சரியான மருத்துவ கட்டமைப்பு என்பது தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ளது, முகக் கவசம் அணிவதும் தடுப்பூசி திருத்திக் கொள்வதும், மிக மிக முக்கியம் இதுவரையில் கணக்கீடுகள் அடிப்படையில் கவனித்துப் பார்த்தால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மட்டுமே இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்கள் ஊசி செலுத்தி கொண்டவர்கள் மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர்..

ஆகவே தடுப்பூசி மட்டுமே சரியான தேர்வு எதிர்வரும் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளை எடுத்துக்கொண்டால் 100% மாணவ-மாணவிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தி முடித்திருக்கிறோம்.

தற்சமயம் ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதிலும் கூட 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன, இது ஒரு மிகப்பெரிய நிறைவான செய்தி என்று தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன்.

60 வயதைத் தாண்டியவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்று பார்த்தால் சுமார் 9 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு இலக்கு நிர்ணயம் செய்து தான் வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் ம சேவைத் துறைகளை சார்ந்த அதிகாரிகளும் அல்லும், பகலும், அயராது உழைத்து வருகிறார்கள். அந்த விதத்தில் இதுவரையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள். பட்டியலை கணக்கிட்டு அவர்களை முகாமுக்கு அழைத்து வந்து தடுப்பு செலுத்த வைப்பதில் மிகப் பெரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள் என கூறியிருக்கிறார்.

இந்த சிரமத்தை தவிர்க்கும் விதத்தில் தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே சரியான தீர்வு என்பதை உணர்ந்து 60 வயதைத் தாண்டியவர்கள் தாங்களாகவே முன்வந்து முகங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அது தான் நன்றாக இருக்கும் அவரவர் குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தி அவர்களை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

அதே சமயம் நோய் தொற்று காலத்தில் மற்ற நோய்களுக்கான சிகிச்சை கொடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது, தாமதம் நடந்துவிடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். மக்கள் சிரமப்பட்டு விடக்கூடாது என்று மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் 45,16, 974 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு என்பது தன்னுடைய முழு வெற்றியை பெற்றிருக்கிறது முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை சிரமமாக இருந்தாலும் கூட பொதுமக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக காணும் பொங்கல் அன்று கூட ஊரடங்கை மதித்து அதனை பொது மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

இருந்தாலும் மெரினா, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பாதுகாப்பு குறைவான பகுதிகளில் பொதுமக்கள் சென்றிருக்கிறார்கள். காவல்துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும், அவர்களை உடனடியாக வெளியேற்றி விட்டார்கள் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.