மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள்…! கேள்வியுற்ற அதிர்ச்சித் தகவல்…!

Photo of author

By Sakthi

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் காரணத்தால் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார்கள்.

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு விற்கு மூச்சுத்திணறல் அதிகமான காரணத்தால் சென்ற 13-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அதன் பின்பு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் தான் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள் அவருக்கு நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று ஒரு தகவல் வெளியானது இதனைக் கேள்வியுற்ற தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் காமராஜ் தங்கமணி சிவி சண்முகம் வேலுமணி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் அவர்கள் அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டதாக தெரிகின்றது.