3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்!
வானில் எவ்வளவோ அற்புத நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. அவற்றில் சில நம் கண்களுக்கு தெரியும். சில நிகழ்வுகள் நம் கண்களுக்கு தெரியாமலே போய்விடும். சிலவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியும். அப்படி வெறும் கண்களால் பார்த்து ரசிக்கும்படியான ஓர் அற்புத நிகழ்வு இன்று மாலை நடக்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
நாம் இதை இதற்க்கு முன் படித்து இருப்போம். அந்த விஷயம்தான் பூமி சூரியனை சுற்றி வரும் தளத்தை ஒட்டியே அணைத்து கோள்களும் சுற்றும். ஒவ்வொரு கோளுக்கும் இடைப்பட்ட தூரம் மாறுபடும். அவ்வாறு தனது பாதைகளில் கோள்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது பூமிக்கு அருகில் உள்ள கோள் தொலைவிலுள்ள கோளை முந்திச் செல்வது போல் இருக்கும் அந்த நேரத்தில் அங்கு இரு கோள்களும் அருகருகே இருப்பது போல் தெரியும்.
இன்று மாலையில் வெள்ளி கோளும் மிக தொலைவில் இருக்கும் செவ்வாய் கோளும் அருகருகே இருப்பது போல் தெரியும். அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியை விட குறைவாக இருக்கும். இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்த பிறகு வீடுகளின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேற்கு திசையை உற்று நோக்கினால், அங்கு ஒரு ஒளி பொருந்திய வெள்ளிக்கோள் தெரியும். தொலைதூரத்தில் இருக்கும் செவ்வாய் கோள் ஒளி குறைவாக வெள்ளிக்கு அருகிலேயே இருப்பது போல் தெரியும் இந்த அற்புதக் காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். எனவே பொது மக்கள் இதைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.