வீட்டில் நுழைவு வாயில் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!! மாற்றம் நிச்சயம் நிகழும்..!!

0
194
Mirror vastu in Tamil

Mirror vastu in Tamil: நாம் எவ்வளவு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதனை வாஸ்து பார்த்துதான் கட்டுவோம். எந்தெந்த அறைகள் எங்கு இருக்க வேண்டும் என்று எல்லாம் சரியாக திட்டம் பாேட்டு மிகச்சரியாக நாம் நினைத்தது போன்று வீட்டினை கட்டி முடித்துவிடுவோம். அது போல சில பொருட்களை நமக்கு பிடித்தது போல வாங்கி வீடுகளில் வைப்போம். அப்படி வாங்கும் பொருட்கள் நிச்சயம் நமக்கு பிடித்த பொருட்களாக இருக்கும். அப்படி இல்லையென்றால் வாஸ்து பொருட்களாக இருக்கும்.

அதுபோல நம் வீட்டில் நுழைவு வாயிலில் மற்றவர்கள் பார்க்கும்படியான பொருள் என்ன வைக்க வேண்டும். அதனால் என்ன பலன் என்று இந்த பதிவில் (kannadi vastu in tamil) பார்க்கலாம்.

வைக்க வேண்டிய பொருள்

நம் வீட்டின் நுழைவாயிலில் ஒரு மங்களகரமான பொருட்களை வைப்பதன் மூலம், நம்மக்கு எதிர்மறை ஆற்றலை விளைவிக்க கூடியவர்களிடம் இருந்து அந்த பொருள் நம்மை காக்கும் என நம்பப்படுகிறது. நாம் சில வீடுகளில் பார்த்திருப்போம். முன் கதவு வைக்கும் இடத்தில் ஒரு பெரிய கண்ணாடி ஒன்றை வைத்திருப்பார்கள்.

கதவு உயரத்திற்கு அந்த கண்ணாடி இருக்கும். அப்படி கண்ணாடி வைக்கலாமா என்றால் நிச்சயம் வைக்கலாம். அஷ்ட மங்கள பொருட்களில் ஒன்று தான் இந்த கண்ணாடி. வீட்டின் நுழைவு வாயில் இந்த கண்ணாடியை வைப்பதன் மூலம் நம் வீட்டிற்கு எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களின் பார்வை இந்த கண்ணாடியில் பட்டால் அது நம்மை பாதிக்காது.

நாம் கோயில்களிலும் கூட சில இடங்களில் கண்ணாடி வைத்திருப்பதை பார்த்திருப்போம். மேலும் அஷ்ட மங்கள பொருட்களான சங்கு, மீன் தொட்டி, உருளி, விளக்கு, தோரணம் போன்றவற்றை வைக்கலாம். இப்படியாக வைத்தோம் ஆனால் வீட்டிற்கு வரும் கண்திருஷ்டி இவைகளால் தடுக்கப்படும்.

மேலும் பூஜை அறையில் ஒரு கண்ணாடியை கடவுளின் படத்திற்கு எதிரே மாட்டி வைத்திருப்பது நல்லது. இதனால் வீட்டில் செல்வம், ஐஸ்வர்யம் பெருகும்.

மேலும் படிக்க: நிம்மதி பண வசியம் தரும் சிவப்பு குண்டுமணி ரகசியம்..!! நினைத்தது நடக்கும்..!!