World

கூகுள் மேப்பில் இருந்து காணாமல் போன நாடு ?

உலகில் பல கோடி மக்கள் அவர்களின் பயண வழிகளுக்கு கூகுள் மேப்பை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நண்பர்கள் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றால் கூட நம் நண்பர்கள் வழி சொல்ல தயாராக இருந்தாலும் கூகுள் மேப் லொகேஷன் எனக்கு அனுப்பு என்று தான் கூறுகின்றோம்.அந்த அளவிற்கு கூகுள் மேப் மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது.ஏன் டெலிவரி வேலை செய்பவர்களுக்கும் ஆட்டோ, டெக்ஸி இதுபோன்ற டிராவலிங் தொழில் செய்பவர்களுக்கும் கூகுள் மேப் ஆனது பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
உலகெங்கும் இந்த அமைப்பினை சுமார் 100 கோடி மக்களுக்கு மேலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு உலக மக்களுக்கு வழிகாட்டும் கூகுள் மேப் ஒரு நாட்டின் பெயரையே, தனது வரைபடத்தில் இருந்து மேப் மறைத்துள்ளது. கூகுள் வரைபடத்தில் பாலஸ்தீனம் (Palestine) என்று டைப் செய்தால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, இஸ்ரேல் வரைபடமே காட்டப்படுகிறது.
பாலஸ்தீன் வரைபடத்தை எப்படி மாறி மாறி தேடினாலும், பயனர்களால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டையே பார்க்கவே முடிவதில்லை.

Leave a Comment