கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா?
இந்து மற்றும் முஸ்லிம் என்று கலப்புத் திருமணம் செய்வது தனிப்பட்ட சட்டத்தின் கீழ் செல்லாது என்று வழக்கு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.
ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆனதை பதிவு செய்ய வேண்டும் என்றும் எங்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்து பெண்ணும் இஸ்லாமிய இளைஞரும் தாக்கல் செய்துள்ள மனுவில் “பெண்ணின் குடும்பத்தார் எங்களுக்கு இடையே உள்ள உறவை எதிர்த்தனர். மேலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டால் சமூகத்தில் இருந்து புறக்கணித்து விடுவோம் என்று கூறினர்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா அவர்கள் “இந்திய அரசியலமைப்பின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்தாலும் இஸ்லாம் மதத்தில் உள்ள சட்டத்தின் கீழ் இது திருமணமாக கருதப்படாது.
இஸ்லாமிய சட்டத்தின் படி இஸ்லாம் மதத்தில் ஒரு இளைஞருக்கு உருவ வழிபாடு என்பது கிடையாது. நெருப்பை தெய்வமாக வழிபடும் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தது அவர்களின் வழக்கத்தில் செல்லுபடியாகாது” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடும்பத்தினர் தரப்பில் இருந்து அந்த பெண் அவருடைய இஸ்லாமிய நண்பரை திருமணம் செய்து கொள்ள வீட்டிலிருக்கும் நகைகளை எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டனர். இதற்கு அந்த பெண் தரப்பிலான வழக்கறிஞர் “அந்த பெண்ணும் இளைஞரும் இந்திய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதற்காக அந்த பெண்ணோ அல்லது அந்த இளைஞரோ மதம் மாற விரும்பவில்லை. அந்த பெண் திருமணம் முடிந்த பின்னர் தொடர்ந்து இந்து மதத்தையும் இந்த இளைஞர் தொடர்ந்து இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுவார்.