நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள்! உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

0
92

உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், பொங்கல் பண்டிகையை மிக விரைவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் காணும் பொங்கலின் போது உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது

தமிழ்நாட்டில் முன்னரே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பொங்கல் கொண்டாட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என தெரிகிறது.

அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, உள்ளிட்டவை தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாகவும், பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்துவது தொடர்பாகவும், முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.