எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானது.
அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்து எடுத்துக் கொண்டிருக்க திமுக அதற்கு மாறாக ஓ பன்னீர்செல்வம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்தது.
ஆனால் திமுகவின் சூட்சமத்தை புரிந்து கொண்ட அதிமுக தலைமை இது தொடர்பாக பெரிய அளவில் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு திறமைமிக்க எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுவிட்டால் தன்னுடைய தந்திரம் வீணாகிப் போகும் என்ற பயத்தின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை செயல்படவிடாமல் தடுப்பதற்கு பல்வேறு உத்திகளைக் கையாண்டார்.
இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலமாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், திமுக ஆட்சியின் 8 மாத காலத்தில் இதுவரையில் 5 அனைத்துக் கட்சிக் கூட்டங்களை இந்த அரசு நடத்தியிருக்கிறது என்று தெரிவித்தார்.
சட்ட சபையில் ஆளும் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களை விட எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் அதிகநேரம் உரையாற்றுகிறார் சட்டசபையில் கருத்துக்களைச் சொல்வதற்கு முழுமையாக அவர்களுக்கு நேரம் வழங்கப்படுகிறது. இதைவிட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, என்னை சர்வாதிகாரி என்று தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி நான் பொம்மை என்றும் சொல்லியிருக்கிறார் இப்படி வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர். மக்கள் கொடுத்த தோல்வியின் காரணமாக, அவருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை என்று கலாய்த்திருக்கிறார் முதலமைச்சர்.
அதிமுக ஆட்சி காலத்தின் போது பொங்கலுக்கு 5,000 ரூபாய் வழங்க சொன்னார் ஸ்டாலின் தற்சமயம் 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றியிருக்கிறார். நான் 5,000 ரூபாய் கொடுக்க சொன்னது நோய்த்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தான் என்று தெரிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில் அமர்ந்தவுடனேயே 2.15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணையில் 4,000 ரூபாய் வழங்கி விட்டோம். ஆனாலும் அதனை திசைதிருப்பும் பொய்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி என்று முதலமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.