எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது அதிமுகவிடமில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

Photo of author

By Sakthi

தேனியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு 11,000 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார், இதுகுறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வளர்ச்சி என்பதை எல்லோரும் சாத்தியப்படுத்துவது தான் திராவிட மாடல், மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களுடைய செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

10 வருடங்களில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே வருடத்தில் செய்திருக்கிறது திமுக அரசு, மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இலங்கை மக்களுக்கு உதவும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் உடைத்தெறிவோம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என தெரிவித்திருக்கிறார்.

பெரியகுளம், உத்தமபாளையம், உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் மருத்துவமனைகள் தரமுயர்த்தப்படும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதவில்லை விமர்சனத்திற்கு பதில் தர நான் விரும்பவில்லை என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

எம்ஜிஆரிடமிருந்த அரசியல் நாகரிகம் தற்போது இருப்பவர்களிடமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக 64 ஆயிரம் கோடி முதலீடு கவரப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.