68 தமிழக மீனவர்கள் விடுதலை! மத்திய அமைச்சரிடம் நேரில் முக்கிய வேண்டுகோளை வைத்த திமுக எம்பிக்கள்!

Photo of author

By Sakthi

சென்ற 19 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 55 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியின் மூலமாக வேண்டுகோள் வைத்து, கடிதம் மூலமாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டு இருந்தார்.

ஆனால் அதற்குள் மறுபடியும் இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலாடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற பயமுறுத்தும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதை தடுக்கும் விதமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாக் நீரிணை பகுதியில் மீன் பிடிப்பதற்கான நம்முடைய பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவது, மீனவர்களின் உயிர்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்றும், அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையிடமிருந்து மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வலியுறுத்தி இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய இந்த கடிதத்தை நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக வலியுறுத்தி வழங்கியிருக்கிறார்கள்.