PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, திமுக, பாமக போன்ற முன்னணி கட்சிகளில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் பாமகவில் அது சற்று அதிகமாகவே உள்ளது எனலாம். தந்தையே மகனை தலைவர் பதிவியிலிருந்து நீக்கியது, இதனால் கட்சி இரண்டாக பிளவுற்றது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்து விட்டன.
இந்நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவரை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமதாசை காண சென்றனர். அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சென்ற போது அவர்கள் இருவரும் சுமார் அரைமணி நேரம் உரையாடியதாக சொல்லப்படுகிறது.
இது கூட்டணி குறித்த உரையாடல் என்றும் பேசப்பட்டது. இது குறித்து பாமகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அருள் தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் இபிஎஸ்-ராமதாசின் அரைமணி நேர பேச்சு உண்மை தான், ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றி எனக்கு எப்படி தெரியும் என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த பதிவு பாமக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இவர் பாமகவிலிருந்து தனித்து விடப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆரம்பத்திலிருந்து, கட்சி இரண்டாக பிளவுற்ற போது வரை ராமதாசை தொடர்ந்து ஆதரித்து வரும் அருளிடம், கூட்டணி குறித்து ராமதாஸ் விவாதிக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.