கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்!

Photo of author

By Hasini

கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்!

திரிபுரா மாநில சூர்மா தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவர் ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்ச்சியாக அந்த மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அது எல்லா இடங்களிலும் பொதுவாக நடப்பது தான்.

பாஜக கட்சியினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அங்கு ஆட்சி அமைக்கும் கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுவது சகஜம்தான். அதை நாம் நடைமுறையிலும் பார்த்து வருகிறோம். அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். இதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம் அல்லவா? உதாரணம் மோடியின் சிறந்த ஆட்சியே ஆகும்.

இந்த நிலையில் அவர் மேற்கு வங்காள மாநிலம் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு காளி கோயிலுக்குச் சென்றார். அங்கு சென்று ஆசி பெற்ற அவர் அதை தொடர்ந்து மொட்டையும் அடித்துக் கொண்டார். தன் வேண்டுதலை நிறைவேற்றினார். அதன் பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

பாஜக அரசு நாடு முழுவதையும் விழுங்கிக் கொண்டே வருகிறது. நான் பாஜகவின் ஒரு பகுதியாக மாறியதன் மூலம் ஒரு மாபெரும் குற்றத்தை செய்ததாக உணர்கிறேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறாகும். இதை நான் மனதார கருதுகிறேன். நான் இங்கு இப்போது காளி கோவிலில் பூஜை செய்தேன்.

பாஜகவில் இணைந்தது பெரிய குற்றம் என்றும் கருதுகிறேன். எனவே இந்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் நான் மொட்டை அடித்துக்கொண்டேன். இந்த தீய சக்தியை அழிக்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். மேலும் பாஜகவில் இருந்து நான் விலகுகிறேன். அடுத்தடுத்து மற்ற எம்எல்ஏக்களும் தொடர்ந்து வெளியேறி விடுவார்கள் என்றும் கூறினார்.

தற்போது திரிணாமல் காங்கிரஸ் கட்சியில் சேர ஆயத்தமாகி வருகிறேன். இது குறித்து அக்கட்சியுடன் பேசி வருகிறேன் என்றும் கூறினார். இவர் இவ்வாறு செய்தது மக்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உள்ள நபரே இப்படி செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.