10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
82

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. நடப்பாண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென்று சாரல் மழை பெய்தது, அதன்பிறகு நாள் முழுவதும் கனமழை தொடர்ந்து பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கனமழையின் எதிரொலியாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று முதல்வர் ஸ்டாலின் விடுமுறை வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில், சென்னையை தவிர்த்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான அளவிலான மழை தொடர வாய்ப்பு இருக்கிறது.

இவற்றில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதே போல தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.