சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கொண்டனர்.
இதில் நடிகர் ராதாரவியும் பங்கேற்றுக் கொண்டார், அவர் உரையாற்றும் போது இந்தியாவின் மிகப்பெரிய அக்யூஸ்ட் மோடிஜியும், அமித்ஷாவும், தான் என்று கூறினார். இது பாஜகவின் தொண்டர்கள் இடையே மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
நாட்டில் இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்காங்க அது யார்னா நம்ம மோடி ஜி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் இதை எல்லோரும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த 2 பேரும் கருவறுத்துருவாங்க ஜாக்கிரதை என்று கூறியிருக்கிறார்.
அவருடைய இந்த பேச்சைக் கேட்டு அங்கிருந்த பாஜகவின் தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர் இணையத்தில் இவருடைய பேச்சு வைரலாகி பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.