சமூக ஊடகங்களில் மோடி குடும்பம் பெயரை மாற்ற மோடி கோரிக்கை

0
264
Prime Minister Narendra Modi will face setbacks! Congress party in happiness!
Prime Minister Narendra Modi will face setbacks! Congress party in happiness!

சமூக ஊடகங்களில் மோடி குடும்பம் பெயரை மாற்ற மோடி கோரிக்கை

சமூக ஊடகங்களில் பாஜக ஆதரவாளர்கள் மோடியின் குடும்பம் என்ற பெயரை அகற்ற மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போது மோடியின் ஆதரவாளர்களாக செயல்பட்ட நெட்டிசன்கள் தங்களது ப்ரொபைல் பெயருக்கு பின்னால் “மோடி கா பரிவார்” என்ற பெயரை குறிப்பிட்டு இருந்தனர். இதற்கு மோடியின் குடும்பம் என பொருள்படும்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி தக்கவைத்துக் கொண்டார். இதில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மற்றும் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ராஜ் நாத் சிங் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றனர்.

மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவினர் சமூக வலைவினங்களில் தீவிரமாக ஆதரவு திரட்டி வந்தனர். அதில் மோடியின் ஆதரவாளர்களாக செயல்பட்ட நெட்டிசன்கள் தங்கள் ப்ரொபைல் பெயருக்கு பின்னால் “மோடி கா பரிவார்” என பெயர் சூட்டி இருந்தனர். அதற்கு மோடியின் குடும்பம் என பொருள்படும்.

தற்போது பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் “தேர்தல் பரப்புரையின் போது இந்தியா முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் மோடியின் குடும்பம் என்று சேர்த்தது தனக்கு மிகவும் பலத்தை அளித்ததாக” தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது மிகப்பெரிய சாதனையாகும். இதன் மூலம் நமது நாட்டில் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமூக ஊடக கணக்குகளில் இருந்து மோடியின் குடும்பம் எனப் பொருள்படும் “மோடி கா பரிவார்” என்ற வார்த்தையை அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது நாட்டின் காவலாளி என பொருள் உள்ள சவுக்கிதார் என்ற பெயரை பிரதமர் மோடி தனது பெயருக்கு பின்னால் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினரும் இந்த பெயரை தனது வலைதள கணக்குகளில் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டனர்.

Previous articleஉங்கள் கண் இமை அழகாகவும் தடிமனாகவும் இருக்க ஆசையா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்கள்!!
Next articleதமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை