பெண்களுக்கு முகத்தில் எங்கு மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம்..!

Photo of author

By Priya

Macha Palangal: பெண்கள் தங்களை அழகாக பராமரித்து கொள்வதற்கு எப்பொழுதும் தனி கவனம் செலுத்தி வருவார்கள். ஆனால் குறிப்பிட்ட பெண்கள் இதில் விதி விலக்கு தான். காரணம் இவர்களினன் வேலை பளு போன்ற காரணங்களால் இதில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இருந்த போதும் இயற்கையாகவே ஒரு சில விஷயங்கள் நமக்கு மேலும் அழகு சேர்க்கும். சிலர் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சிலரி சிரித்தாலே அழகாக தெரிவார்கள். இந்நிலையில் முகத்தில் மச்சம் உள்ள பெண்கள் மற்றவர்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். காரணம் அவர்களின் முகத்தில் இருக்கும் மச்சம் மற்றவர்களின் கண்களை வெகுவாக கவர்வதினால்.

இந்த மச்சம் அவர்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. நாம் இந்த பதிவில் பெண்களுக்கு முகத்தில் எங்கு மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் என்று (mole benefits in tamil) பார்ப்போம்.

மச்சம்

மச்சம் பொதுவாக ஒருவருக்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது தோலின் மீது ஏற்பட்டிருக்க கூடிய ஒரு சிறிய புள்ளி போன்ற அமைப்பு. இது பிறக்கும் போது அல்லது ஒரு சிலருக்கு இடையில் ஏற்படும். இது கருப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் பெரியதாகவும், சிறியதாகவும் காணப்படும்.

வலது நெற்றியில் மச்சம்

ஒரு பெண்ணுக்கு வலது நெற்றியில் மச்சம் இருந்தால், அது அவர்களின் செழிப்பான வாழ்வை குறிப்பதாகும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. மேலும் இவர்கள் செய்யும் தொழில்கள் அதிக வருவாய் பெற்று தரும். வாழ்க்கை துணை சரியாக அமைவார்கள்.

இடது நெற்றியில் மச்சம்

ஒருவருக்கு இடது நெற்றியில் மச்சம் இருந்தால் செல்வந்தர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சற்று தயக்கம் காட்டுபவர்களாக இருப்பார்கள்.

மூக்கில் மச்சம்

மூக்கில் எங்கு மச்சம் இருந்தாலும் அவர்களிடத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் நினைத்து எல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு வாழ்வார்கள்.

உதட்டின் மேல் அல்லது கீழ் மச்சம் 

இவர்களுக்கு காதல் வாழ்க்கை நன்றாக அமையும். மேலும் இவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.  உதட்டின் மேல் மச்சம் இருந்தால் இவர்களுக்கு புகழ் வந்து சேரும். அதுவே கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் கல்வியறிவை பெறுவதில் சற்று சிரமப்படுவார்கள்.

கண்களில் மச்சம்

வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இருக்கும்.

புருவத்தில் மச்சம்

புருவத்தில் மச்சம் இருந்தால் இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக காணப்படும்.

காதுகளில் மச்சம்

காதுகளில் மச்சம் இருந்தால் இவர்களுக்கு செலவு இருந்துக்கொண்டே இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ்வார்கள்.

கன்னத்தில் மச்சம்

கன்னத்தில் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் பணத்திற்கு சற்று சிரமமாக இருக்கும். வாழ்வில் கஷ்டப்பட்டு உயரத்திற்கு வருவார்கள். இடதுப்பக்கத்தில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்ககை அமையும்.

மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பொதுவான கருத்துகளாகும். மச்சத்திற்கு காரனகாரர்களாகிய ஒருவரின் ஜாதகத்தில் ராகு, கேது மற்றும் நீசமாக செவ்வாயும், சனியின் பார்வையினால்  ஒருவருக்கு மச்சம் ஏற்படும் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுவார்கள். எனவே இது ஒருவருக்கு தனிப்பட்ட ஜாகத்திற்கு மாறலாம்.

மேலும் படிக்க: அதிகாலை முழிப்பு வருகிறதா? அப்போ இதான் அர்த்தம்..!