அடேங்கப்பா பிச்சைக்காரன் வீட்டில் இவ்வளவு பணமா? காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் அங்கிருக்கின்ற சிறிய குடிசையில் தங்கியிருந்து ஆலயங்களில் பிச்சையெடுத்து வந்திருக்கிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக, அவர் நேற்று உயிரிழந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாருமில்லாத காரணத்தால், அங்குள்ள காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அவருடைய உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இந்தநிலையில், ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம், அதில் 2000, 500, 200, 100, உள்ளிட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்கள் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை எண்ணிப் பார்த்தபோது 3,49,500 ரூபாய் இருந்தது.

இதனை தொடர்ந்து முதியவரின் உடலை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணம் அனைத்தையும் சமூக அறக்கட்டளைக்கு வழங்குவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.