கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம்! நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள்!!

Photo of author

By Sakthi

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம். நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள்.
பாட்னாவில் கழிவு நீரில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இதை பார்த்த மக்கள் அனைவரும் நாற்றத்தை கூட பொருட்படுத்தாமல் கழிவு நீரில் இறங்கி பணத்தை எடுத்தனர்.
பாட்னாவில் ஒரு நகரின் கழிவு நீர் பாலத்திற்கு கீழ் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக இருந்துள்ளது. கழிவு நீரில் அடிக்கும் கடும் நாற்றத்தையும் கூட பொருட்படுத்தாமல் அந்த பணங்களை எடுக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கழிவு நீரில் இறங்கி பணத்தை எடுத்தனர்.
யாரோ ஒருவர் இரவு நேரத்தில் இந்த பணத்தை கழிவு நீரில் வீசிச் சென்றுள்ளதாக தெரிகின்றது. கழிவு நீரில் பணக்கட்டுகள் இருந்த தகவலை அறிந்து அந்த இடத்திற்கு வந்த போலிசார் பணத்தை கைப்பற்றி கழிவு நீரில் பணத்தை வீசிச் சென்றது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றது. பணத்தை பார்த்தால் பிணம் கூட வாய் பிளக்கும் என்று சொல்வார்கள். அது மதாரியே பணத்தை பார்த்தவுடன் நாற்றம் கழிவுநீர் என எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணத்தை எடுத்தது வேடிக்கையாக இருக்கின்றது.